திருப்பாவை 26 – மாலே மணிவண்ணா – பாடல் வரிகள்
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே, கொடியே, விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26
Thiruppavai 26 – Maale manivannaa Lyrics
Maale manivannaa maarkazhinee raaduvaan
Melaiyaar seyvanagal venduvana kettiyel
Gnaalaththai yellaam nadungumuralvana
Paalanna vannaththul paanjasanniyame
Polvana sangangal poyppaadudaiyanave
Saalapperum paraiye, pallaan disaippaare
Kola vilakke, kodiye, vidhaaname
Aalin ilaiyaay arulelo rembaavaay. 26
What is Thiruppavai 26 – Maale manivannaa?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 26-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 26 – Maale manivannaa?
மார்கழி மாதம் 26-ஆம் நாள், அதிகாலையில்.
