திருப்பாவை 20 – முப்பத்து மூவர் – பாடல் வரிகள்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 20 – Muppaththu moovar Lyrics
Muppaththu moovar amararkku munsendru
Kappam thavirkkum kaliye thuyilezhaay
Seppam udaiyaay thiraludaiyaay setraarkku
Veppam kodukkum vimalaa thuyilezhaay
Seppanna menmulai sevvaay sirumarungul
Nappinnai nangaay thiruve thuyilezhaay
Ukkamum thattoliyum thandhuun manaalanai
Ippodhe emmai neeraattelo rembaavaay.
What is Thiruppavai 20 – Muppaththu moovar?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 20-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 20 – Muppaththu moovar?
மார்கழி மாதம் 20-ஆம் நாள், அதிகாலையில்.
