Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 18 – Undhu madhagalitranதிருப்பாவை 18 – உந்து மதகளிற்றன்

Pasuram · Andal

திருப்பாவை 18 – உந்து மதகளிற்றன் – பாடல் வரிகள்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

More songs