Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 15 – Elle ilamkiliyeதிருப்பாவை 15 – எல்லே இளம்கிளியே

Pasuram · Andal

திருப்பாவை 15 – எல்லே இளம்கிளியே – பாடல் வரிகள்

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

More songs