திருப்பாவை 14 – உங்கள் புழக்கடைத் – பாடல் வரிகள்
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
Thiruppavai 14 – Ungal puzhakkadaith Lyrics
Ungal puzhakkadaith thottaththu vaaviyul
Sengazhuneer vaay negizhndhu aambal vaay koombina kaan
Sengar podik koorai venbal thavaththavar
Thangal thirukkoyil sangiduvaan podhandraar
Engalai munnam ezhuppuvaan vaaypesum
Nangaay ezhundhiraay naanaadhaay naavudaiyaay
Sangodu sakkaram endhum thadakkaiyan
Pangayak kannaanaip paadelor embaavaay.
What is Thiruppavai 14 – Ungal puzhakkadaith?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 14-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 14 – Ungal puzhakkadaith?
மார்கழி மாதம் 14-ஆம் நாள், அதிகாலையில்.
