Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 11 – Katruk karavaikதிருப்பாவை 11 – கற்றுக் கறவைக்

Pasuram · Andal

திருப்பாவை 11 – கற்றுக் கறவைக் – பாடல் வரிகள்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகரந்து ''''

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

More songs