திருப்பாவை 12 – கனைத்து இளம் – பாடல் வரிகள்
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
Thiruppavai 12 – Kanaiththu ilam Lyrics
Kanaiththu ilam katrerumai kandrukku irangi
Ninaiththu mulai vazhiye nindru paal sora
Nanaiththu illam seraakkum nar selvan thangaay
Panith thalai veezha nin vaasar kadai patrich
Sinaththinaal then ilangaik komaanaich setra
Manaththukku iniyaanaip paadavum nee vaay thiravaay
Iniththaan ezhundhiraay eedhenna per urakkam
Anaiththu illaththaarum arindhelor embaavaay
What is Thiruppavai 12 – Kanaiththu ilam?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 12-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 12 – Kanaiththu ilam?
மார்கழி மாதம் 12-ஆம் நாள், அதிகாலையில்.
