Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 9 – Thoomani maadaththuchதிருப்பாவை 9 – தூமணி மாடத்துச்

Pasuram · Andal

திருப்பாவை 9 – தூமணி மாடத்துச் – பாடல் வரிகள்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

More songs