Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 7 – Keesugee sendrengumதிருப்பாவை 7 – கீசுகீ சென்றெங்கும்

Pasuram · Andal

திருப்பாவை 7 – கீசுகீ சென்றெங்கும் – பாடல் வரிகள்

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ! பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயண மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்!

More songs