Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 5 – Maayanai mannuதிருப்பாவை 5 – மாயனை மன்னு

Pasuram · Andal

திருப்பாவை 5 – மாயனை மன்னு – பாடல் வரிகள்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்!

More songs