Skip to content
Bakthi Paadalgal
PerumalPerumal

Thiruppavai 2 – Vaiyaththu Vaazhveergaalதிருப்பாவை 2 – வையத்து வாழ்வீர்காள்

Pasuram · Andal

திருப்பாவை 2 – வையத்து வாழ்வீர்காள் – பாடல் வரிகள்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யா தன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

More songs