திருப்பாவை 1 – மார்கழித் திங்கள் – பாடல் வரிகள்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
Thiruppavai 1 – Maargazhi Thingal Lyrics
Maargazhith thingal madhi niraindha nannaalaal
Neeraadap podhuveer podhumino nerizhaiyeer
Seermalgum aaippaadich chelvach chirumeergaal
Koorvel kodunthozhilan Nandhagopan kumaran
Eraarndha kanni Yasodhai ilanchingam
Kaarmenich chengan kadhirmadhiyam pol mugaththaan
Naaraayanane namakke parai tharuvaan
Paaror pugazhap padindhelor empaavaai
What is Thiruppavai 1 – Maargazhi Thingal?
ஆண்டாள் அருளிய முப்பது பாசுரங்களில் முதலாவது. மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம் பாடுவது வழக்கம்.
When to chant Thiruppavai 1 – Maargazhi Thingal?
மார்கழி மாதம் முதல் நாள், அதிகாலையில்.
