Skip to content
Bakthi Paadalgal
MuruganMurugan

Sandhadham Bandhath Thodaraaleசந்ததம் பந்தத் தொடராலே

Thiruppugazh · Arunagirinathar

சந்ததம் பந்தத் தொடராலே – பாடல் வரிகள்

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந் துஞ்சித் திரியாதே

கந்தனென் றென்றுற் றுனை நாளும்

கண்டுகொண்டன்புற் றிடுவேனோ?

தந்தியின் கொம்பைப் புணர்வோனே

சங்கரன் பங்கிற் சிவைபாலா!

செந்திலங் கண்டிக் கதிர்வேலா!

தென்பரங் குன்றிற் பெருமாளே!

More songs