காலனார் வெங்கொடுந் தூதர் – பாடல் வரிகள்
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காண ஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் மருகோனே!
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் பதிவாழ்வே!
தாவுஞ் ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் பெருமாளே!
Kaalanaar Vengodun Thoodhar Lyrics
Kaalanaar vengodun thoodharpaa sangoden
Kaalinaar thandhudan kodubogak
Kaadhalaar maindharun thaayaraa runjudung
Kaaname pinthodarn thalaraamun
Soolamvaal thandusenj sevalko thandamunj
Soodudho lundhadan thirumaarpum
Thooyadhaal thandaiyung kaana aar vanjeyun
Thogaimel kondumun varavenum
Aalagaa lambaran paaladhaa kanjidun
Thevarvaa zhandrugan thamudheeyum
Aaravaa ranjeyum velaimel kanvalarn
Thaadhimaa yandranan marugone
Saaliser sanginam vaavisoozh pangayanj
Saaralaar sendhilam padhivaazhve
Thaavunj ranjimun saayave kamberun
Thaaraive lundhidum perumaale
What is Kaalanaar Vengodun Thoodhar?
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல், முருகன் மீது பாடியது.
When to chant Kaalanaar Vengodun Thoodhar?
கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமைகளில், அல்லது எந்த நாளிலும்.
