Skip to content
Bakthi Paadalgal
MuruganMurugan

Karuvadaindhu Paththutra Thingalகருவடைந்து பத்துற்ற திங்கள்

Thiruppugazh · Arunagirinathar

கருவடைந்து பத்துற்ற திங்கள் – பாடல் வரிகள்

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப்ப யின்று

கடையில் வந்து தித்துக் குழந்தை வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

முலையருந்து விக்கக் கிடந்து

கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி

அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து

பிணியுழன்று சுற்றித்திரிந்த

தமையுமுன்கரு பைச்சித்தம் என்று பெறுவேனோ?

இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

னரச ரென்றும் ஒப்பற்ற உந்தி

யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரிய தென்றும் ருத்ரற்சி றந்த

அநும னென்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்த புனமேவ

அரிய தன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற

அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே!

அயனை யும்பு டைத்துச்சி னந்து

உலக மும்படைத்துப் பரிந்து

அருள் பரங்கிரிக் குட்சி றந்த பெருமாளே.

More songs