திருப்பாவை 30 – வங்கக் கடல் – பாடல் வரிகள்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
Thiruppavai 30 – Vangak kadal Lyrics
Vangak kadal kadaindha maadhavanaik kesavanai
Thingal thirumugaththuch seyizhaiyaar sendrirainji
Angap paraigonda vaatrai anibudhuvaip
Paingamalath thantheriyal pattarpiraan kodhaisonna
Sangath thamizhmaalai muppadhum thappaame
Ingip parisuraippaar eerirandu maalvaraiththol
Sengan thirumugaththuch selvath thirumaalaal
Engum thiruvarul petru inburuvar embaavaay
What is Thiruppavai 30 – Vangak kadal?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 30-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 30 – Vangak kadal?
மார்கழி மாதம் 30-ஆம் நாள், அதிகாலையில்.
