திருப்பாவை 22 – அங்கண் மாஞாலத் – பாடல் வரிகள்
அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai 22 – Angan maanjaalath Lyrics
Angan maanjaalath tharasar abimaana
Pangamaay vandhunin pallikkat dirkeezhe
Sangamirup paarpol vandhudhalaip peythom
Kingini vaaych seytha thaamaraip pooppole
Sengan siruchchiridhe emmel vizhiyaavo?
Thingalum aadhiththiyanum ezhundhaar pol
Angani randum kondu engalmel nokkudhiyel
Engalmel saabam izhindhelo rembaavaay.
What is Thiruppavai 22 – Angan maanjaalath?
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 22-ஆம் பாசுரம்.
When to chant Thiruppavai 22 – Angan maanjaalath?
மார்கழி மாதம் 22-ஆம் நாள், அதிகாலையில்.
