Skip to content
Bakthi Paadalgal
VinayagarVinayagar

Vidamadaisu Velaiவிடமடைசு வேலை

Thiruppugazh · Arunagirinathar

விடமடைசு வேலை – பாடல் வரிகள்

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

விசையன் விடு பாண மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

வினையின்விளை வேதும் அறியாதே;

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

கழலிணைகள் சேர அருள்வாயே;

இடையர்சிறு பாலை திருடிகொடி போக

இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயமிக வாடியுடையபிளை நாத

கணபதியெ னாம முறைகூற;

அடையலவர் ஆவி வெருவ அடி கூர

அசலுமறி யாமல் அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

அறிவருளும் ஆனை முகவோனே!

More songs