Skip to content
Bakthi Paadalgal
VinayagarVinayagar

Umbartharu Thenumaniஉம்பர்தருத் தேனுமணி

Thiruppugazh · Arunagirinathar

உம்பர்தருத் தேனுமணி – பாடல் வரிகள்

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி

ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;

இன்பரசத் தேபருகிப் பலகாலும்

என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;

தம்பிதனக் காசுவனத் தணைவோனே;

தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே

ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.

More songs