Skip to content
Bakthi Paadalgal
VinayagarVinayagar

Pakkarai Vichitramaniபக்கரை விசித்ரமணி

Thiruppugazh · Arunagirinathar

பக்கரை விசித்ரமணி – பாடல் வரிகள்

பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை

பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு

செப்பென எனக்கருள்கை மறவேனே;

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்

எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள

ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு

விக்கநச மர்த்தனெனும் அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

வித்தகம ருப்புடைய பெருமாளே!

More songs