நினது திருவடி – பாடல் வரிகள்
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்.
நெடிய விளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்;
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றமை ருப்பனை வலமாக.
மருவு மலர்பனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண் குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;
தென்ன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை.
செரும உதரநிரப்பசெ ருக்குடல்
நிரைய அரவநி றைந்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே.
எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்
துடிக ளிடிமிக வொத்துமு ழக்கிட
டிமுடி டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை.
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமானே.
Ninathu Thiruvadi Lyrics
Ninadhu thiruvadi saththima yirkodi
Ninaivu karudhidu puththigo duththida
Niraiya amudhusey muppazha mappamu nigazhpaalthen
Nediya vilaimuri ikkodu lattugam
Niravil arisiba ruppaval etpori
Nigaril inigadha likkani varkkamum ilaneerum
Manadhu magizhvodu thottaga raththoru
Magara salanidhi vaiththadhu thikkara
Valaru karimuga otramai ruppanai valamaaga
Maruvu malarpanai thoththira sorkodu
Valarkai kuzhaibidi thoppan kuttodu
Vanasa paribura porpadha archchanai maravene
Thenna thenadhena theththena nappala
Siriya arubadha moyththudhi rappunal
Thiralum urusadhai piththani nakkudal serimoolai
Seruma udharanirappase rukkudal
Niraiya aravani raindhaga laththidai
Thimidha thimidhimi maththali dakkaigal segasese
Enave thugudhugu thuththena voththugal
Thudiga lidimiga voththumu zhakkida
Dimudi dimudimu dittime naththavil ezhumosai
Igali alagaigal kaipparai kottida
Irana payiravi sutruna diththida
Edhiru nisisara raippeli yittarul perumaane
What is Ninathu Thiruvadi?
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல், விநாயகர் மீது பாடியது.
When to chant Ninathu Thiruvadi?
கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமைகளில், அல்லது எந்த நாளிலும்.
More songs
Ganapathi Atharvashirshamகணபதி அதர்வஶீர்ஷம்
Stotram (Sanskrit) · Atharva Veda · 132 lines
Ganesha Bhujangamகணேஶ புஜங்கம்
Stotram (Sanskrit) · Adi Shankara · 36 lines
Ganesha Kavachamகணேஶ கவசம்
Stotram (Sanskrit) · Ganesha Purana · 56 lines
Ganesha Pancharatnamகணேஶ பஞ்சரத்னம்
Stotram (Sanskrit) · Adi Shankara · 24 lines
