Skip to content
Bakthi Paadalgal
Yesu (Jesus)Yesu (Jesus)

Psalm 121 – Enakku Othasai Varumசங்கீதம் 121 – எனக்கு ஒத்தாசை வரும்

Psalm · Song of Ascents

சங்கீதம் 121 – எனக்கு ஒத்தாசை வரும் – பாடல் வரிகள்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை.

கர்த்தர் உன்னைக் காக்கிறவர்;

கர்த்தர் உன் வலதுபக்கத்தில் உனக்கு நிழலாயிருக்கிறார்.

பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;

அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும்

இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார்.

More songs