Skip to content
Bakthi Paadalgal
AmmanAmman

Mahasakthikku Vinnappamமஹாசக்திக்கு விண்ணப்பம்

Song · Bharathiyar

மஹாசக்திக்கு விண்ணப்பம் – பாடல் வரிகள்

மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்

மூச்சை நிறுத்திவிடு;

தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்

சிந்தனை மாய்த்துவிடு;

யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்

ஊனைச் சிதைத்துவிடு;

ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன

யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்

பாரத்தைப் போக்கிவிடு;

சிந்தை தெளிவாக்கு-அல்லா லிதைச்

செத்த வுடலாக்கு;

இந்தப் பதர்களையே-நெல்லாமென

எண்ணி இருப்பேனோ?

எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று

இயங்கி யிருப்பவளே.

உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ

ஊனம் ஒழியாதோ?

கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்

கண்ணீர் பெருகாதோ?

வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு

வேட்கை தவிராதோ?

விள்ளற் கரியவளே அனைத்திலும்

மேவி யிருப்பவளே!

More songs